சென்னையில் நாளுக்குநாள் வெப்பம் படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று சென்னை மாநகரின் மையப் பகுதிகளில் வெப்பநிலையானது 36.8 டிகிரி செல்சியஸ் இருந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது.
புறநகர் பகுதிகளில் 39.2 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டில் தற்போது வரை சென்னையில் பதிவானதில் அதிகப்படியான வெப்பம் ஆகும்.
இன்று சென்னையில் 37 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால், நேற்று மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிக அளவில் படையெடுத்தனர்.
கடல் காற்று வீசியதன் காரணமாக மக்கள் சற்று தப்பித்ததாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரூரில் நேற்று 40.5 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. நேற்று கரூரில் அதிகபட்சமாக 107.24 டிகிரி பாஹ்ரேன்ஹெய்ட் வெயில் பதிவானது. மேலும் சென்னை, மதுரை, கோவை, தர்மபுரி, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட 10 நகரங்களில் வெயில் சதம் அடித்தது.
முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம்- 98.24 டிகிரி (36.8 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம்-102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
கோவை-101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
ஊட்டி - 78.8 டிகிரி (26 செல்சியஸ்),
கடலூர் - 96.08 டிகிரி (35.6 செல்சியஸ்)
தர்மபுரி - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
கன்னியாகுமரி - 94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
காரைக்கால் - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)
கரூர் - 107.24 டிகிரி (41.8 செல்சியஸ்)
கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)
மதுரை - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
நாகை - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)
நாமக்கல்- 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)
பாளையங்கோட்டை- 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)
புதுச்சேரி- 96.44 டிகிரி (35.8 செல்சியஸ்)
சேலம்- 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்)
தஞ்சை- 93.2 டிகிரி (34 செல்சியஸ்)
திருச்சி- 105.44 டிகிரி (40.8 செல்சியஸ்)
திருத்தணி- 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)
தூத்துக்குடி- 92.3 டிகிரி (33.5 செல்சியஸ்)
வால்பாறை- 86 டிகிரி (30 செல்சியஸ்)
வேலூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)
0 Comments