Tamil Sanjikai

காந்தி தனது கடைசி பிறந்த நாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா?

அக்டோபர் 2-ம் தேதி, அது ஒரு வியாழக்கிழமை. இந்தியா முழுவதும் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடங்கள் களைக்கட்டி கொண்டிருந்தன. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 78 வயதை கடந்து 79 வது வயதுக்குள் காந்தி நுழைந்தார். சுதந்திர இந்தியாவில் அது தான் காந்தியின் முதல் பிறந்த நாள். சுமார் 40 ஆண்டுகள் நாட்டுக்காக, மக்களுக்காகபோராடியவர் காந்தி. ஆனால் இந்த பிறந்த நாள் அவருக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சியைத் தரவில்லை. ஏற்கெனவே 125 வயது வாழ வேண்டும் என ஆசைப்பட காந்தி, தனது 79 வயதில் நீண்டகாலம்வாழ அவர் விரும்ப வில்லை. அக்டோபர் 1 -ம் தேதி நடந்த அவரது பிரார்த்தனை கூட்டத்தில் 'என்னை அவன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் நான் இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை' என்று குறிப்பிட்டு பேசினார். அன்று மாலையில் தன்னை தூய்மை படுத்திக் கொள்வதற்காக 24 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

மறுநாள் அக்டோபர் 2-ம் தேதி வழக்கம் போல அதிகாலையில் எழுந்து தனது கடமைகளை முடித்துவிட்டு கைராட்டில் நூல் நூற்றார். கீதை ஸ்லோகங்களை கேட்டுக் கொண்டு அமைதியாகதியானத்தில் ஈடுபட்டார். அன்று காலையில் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலும், காந்தியைச் சந்தித்தார். காந்தி தனது 50-வது பிறந்த நாள் அன்றும் உடல்நலமில்லாமல் தான் இருந்தார். அது 79-வது பிறந்நாளிலும் தொடர்ந்தது. அவரது நுரையீரலில் கிருமித் தொற்று இருந்ததால் "இன்ஃபூளுயன்சா" காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. அதனால் அவர் இருமியதும், உடல் அசைந்துக் கொடுத்தது. உண்ணா விரதமே அகிம்சை வழி ஆயுதமாகக் கையாளும் சத்யாகிரகியிடம் உள்ள எதாவது ஒரு குறைபாடு தான், வெற்றி குறித்த உறுதியற்ற தன்மைக்கு காரணம் என்பது காந்தியின் கருத்துமாகஇருந்தது. அவரது மகன் தேவதாஸ் அருகில் இருந்தார்.

பல பணக்காரர்களும், தொழிலதிபர்களும் அவரை வாழ்த்த பிரா்த்தனை கூடத்துக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் சுதந்திர இந்தியாவின் தந்தை காந்தி என்று அழைத்தனர். கவர்னர் ஜெனரல்மவுண்ட் பேட்டன் தனது மனைவியோடு வந்திருந்தார். பிரதமர் நேரு, அமைச்சர்களுடன் பல மத சமுதாய தலைவர்களுடன் வந்து காந்தியை சந்தித்தார்.பல மதங்களின் புனித நூல்களில் இருந்துதேர்ந்தெடுத்த வசனங்களை காந்தியின் விருப்பபடி பிரார்த்தனை கூட்டத்தில் படித்தனர். அந்த கூட்டத்தில் நேருவும் கலந்துக் கொண்டார்.

கடிகார முள் சுழன்றுக் கொண்டிருக்க வாழ்த்துகள் கடிதங்களும்,தந்திகளும் பிரார்த்தனை கூடத்துக்கு வந்து சேர்ந்தன. காந்தி பேசும் போது 'நான் இந்தியாவுக்ககு வந்த நாளில் இருந்து மதநல்லிணக்கத்துக்காக உழைப்பதை எனது பணியாக செய்து வருகிறேன். நமது மதங்கள் வேறாக இருந்தாலும், நாம் அனைவரும் சகோதரர்கள் போல ஒற்றுமையுடன் வாழ முடியும். ஆனால் இன்றைய தினம் நம்மை எதிரிகளாக மாற்றி விட்டது. (இந்திய-பாக் பிரிவினையை தான் காந்தி சொல்லியது). இப்படி பட்ட சூழலில் எனக்கு எப்படி பட்ட இடம் இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ளது. நான் உயிருடன் இருப்பதினால் பயன் என்ன ? 125 ஆண்டுகள் வாழ வேண்டும் என்கிற ஆசையை நிறுத்தி விட்டேன். 90 ஆண்டுகள் கூட வாழ விரும்பவில்லை.

இப்போது நான் 79 வது வயதுக்குள் நுழைகிறேன் அதுவும் எனக்கு வேதனையை தருகிறது. என்னை புரிந்துக் கொண்டவர்கள் தங்களின் மிருகத்தனத்தை கை விட வேண்டும். உண்மையில் எனதுபிறந்த நாளை கொண்டாட நீங்கள் விரும்பினால், அத்தகைய பழக்கத்தை கை விட வேண்டும். உங்களுடைய மனதில் கோபம் இருக்குமானல், அதனை அகற்றி விடுங்கள். இதனை மட்டும் நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். அது நலமாக இருக்கும், இவைகளை தான் நான் சொல்ல விரும்புகிறேன். கடவுள் உங்கள் பக்கம் இருக்கட்டும் என்று பேசினார். அடுத்த பிறந்த நாளுக்குள் மகாத்மா காந்திஇறந்து விட்டார்.

-த.ராம்

0 Comments

Write A Comment