இந்தியா - பாகிஸ்தான் நட்புறவுடன் தொடர வேண்டுமானால், பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இந்திய பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குருதாஸ்பூர் - கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். இவர் ஏற்கனவே அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய இம்ரான்கான், நவ்ஜோத் சிங் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புவதாகவும், இந்தியாவில் சித்து ஏன் விமர்சிக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் சித்து போட்டியிட்டால் நிச்சயம் வெல்வார் என்றும், இந்திய பிரதமராக சித்து வர வேண்டும் என்றும் இம்ரான்கான் தெரிவித்தார்.
பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் இந்த விழாவை புறக்கணித்த நிலையில், அம்மாநில அமைச்சர் சித்து விழாவில் பங்கேற்றதும், அவரை இம்ரான்கான் வானளாவ புகழ்ந்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments