Tamil Sanjikai

பாகிஸ்தானின் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் 73வது சுதந்திர தினம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், அதிபர் ஆரிஃப் ஆல்வி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அப்போது, மீண்டும் திரும்ப முடியாத மோசமான சூழலை இந்தியா ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்துவதாகக் கூறினார். அப்படி இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால், அது இரு நாடுகளுக்கு மட்டுமானதாக மட்டும் இருக்காது எனவும் குறிப்பிட்டார்.

போரின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிப்பதாக இருக்கும் என்றும் கூறிய அவர், சுய நிர்ணய உரிமையை பெறும் வரை காஷ்மீருக்கான பாகிஸ்தானின் ஆதரவு தொடரும் என்றும் காஷ்மீர் ஒருபோதும் தனித்துவிடப்பட மாட்டாது என்றும் கூறினார்.

0 Comments

Write A Comment