Tamil Sanjikai

தமிழில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் 96 திரைப்படம். தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கவுள்ளனர். தமிழில் 96யை இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார்.

இந்த 96 தெலுங்கு ரிமேக்கில் தமிழில் சிறுவயது ஜானுவாக நடித்த கௌரி கிஷன், தெலுங்கிலும் ஜானுவாக நடிக்கிறார். இந்த தகவலை கௌரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment