தகுதியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் தேர்தலில் தமது மகன் போட்டியிட உரிமை உள்ளது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் குடும்பத்தினர் தான் அரசியலுக்கு வரக்கூடாது என்று தெரிவித்ததாகவும் மற்றபடி திறமையும், தகுதியும் இருநதால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ஓ.பி.எஸ் கூறினார்.
கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை கூட்டணி இறுதியான பிறகே அ.தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும் என்றும் ஓ.பி.எஸ் குறிப்பிட்டார்.
0 Comments