Tamil Sanjikai

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹேரியர் மாடலின் கான்செப்ட் கார் H5X என்ற பெயரில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாக இருக்கும் முன்னதாகவே ஹேரியர் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் பலமுறை லீக் ஆனது. அந்த வகையில் ஹேரியர் கார் பெங்களூருவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. மேலும் புதிய எஸ்.யு.வி.க்கான முன்பதிவு துவங்கி இருப்பதாகவும், இதற்கு ரூ.30,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த தடவை ஹேரியர் காரில் தற்காலிக ஹெட் லைட் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று முன்பக்கம் இன்டிகேட்டர்கள் மற்றும் பின்புற லைட்களும் தற்காலிகமானதாகவே வழங்கப்பட்டுள்ளது. டாடா எஸ்.யு.வி.யில் இந்ததடவை ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் ஸ்டாப் லேம்ப் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி டாடா ஃபியாட் நிறுவனத்தின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது. எனினும், புதிய காரில் ஹூன்டாயின் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்த கியர்பாக்ஸ் ஃபியாட் க்ரிஸ்லரின் 140 பி.ஹெச்.பி. 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் விலையும் குறைவு என்பதால், டாடா இதை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

டாடா ஹேரியர் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என நம்பப்படுகிறது. புதிய காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமின்றி, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டாடா உருவாக்கிய ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

0 Comments

Write A Comment