Tamil Sanjikai

விளாடிவோஸ்டோக்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னிலையில் ரஷ்யாவும் இந்தியாவும் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கூட்டாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது;-

விளாடிவோஸ்டோக்கிற்கு வரும் முதல் இந்திய பிரதமராக நான் பெருமைப்படுகிறேன். என்னை இங்கு அழைத்த எனது நண்பர் அதிபர் புடினுக்கு நன்றி கூறுகிறேன். 2001 ஆம் ஆண்டு வருடாந்திர உச்சி மாநாடு எனக்கு நினைவிருக்கிறது, அவர் ரஷ்யாவில் அதிபராக இருந்தபோது முதன்முதலில் நடைபெற்றது. நான் குஜராத் முதல்வராக அடல் ஜியின் தூதுக்குழுவில் வந்தேன்.

நாங்கள் (இந்தியா மற்றும் ரஷ்யா) இருவரும் நாட்டின் உள் விஷயங்களில் மற்ற நாடுகள் செல்வாக்கு செலுத்துவதற்கு எதிரானவர்கள்.

ரஷ்யாவுடனான இந்திய உறவு காலம் காலமாக வலுப்படுத்தப்பட்ட ஒன்று. சென்னை - ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து உள்பட இரு நாடுகளிடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அரசு மற்றும் தனியார் துறை இரு நாடுகளின் உறவை பலப்படுத்தி உள்ளன. ஏ.கே-203 துப்பாக்கி இருநாடுகளும் இணைந்து தயாரிக்கும். ரஷ்யா உதவியுடன் விண்வெளியில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

0 Comments

Write A Comment