Tamil Sanjikai

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னும், அவரது நீண்ட நாள் காதலரும் திருமண நிச்சயம் செய்துக்கொண்டதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்..

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் ஜெசிண்டா ஆர்டெர்னும், அவரது காதலரான களார்க் கேஃபோடும் (Clarke Gayford) ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நேவெ (Neve) என்ற பெண் குழந்தை உள்ளது.

உலகிலேயே அரசு பதவியில் இருந்த போது குழந்தை பெற்ற இரண்டாவது தலைவர் ஜெசிண்டா, . ஈஸ்டர் விடுமுறையின் போது அவர்களின் திருமண நிச்சயம் நடந்துள்ளது.

அவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்பு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்த களார்க் தற்போது வீட்டில் குழந்தையை கவனித்து வருகிறார்.

0 Comments

Write A Comment