மதுரையை சேர்ந்த கார் ஓட்டுநர் பிரவீன் குமார் இன்று காலை தனது காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்துகொண்டிருந்தார், அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகே போக்குவரத்து காவலரான ரமேஷ், பிரவீன் குமாரை தடுத்து நிறுத்தி வேட்புமனு தாக்கல் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் செல்ல போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது, எனவே வேறு பக்கமாக செல்லுமாறு தெரிவித்து உள்ளார், ஆனால் கார் ஓட்டுநர் பிரவீன் குமார் அதை ஏற்க மறுத்தார் இதனால் அவருக்கும், போக்குவரத்து தலைமை காவலர் ரமேஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமுற்ற கார் ஓட்டுநர் பிரவீன்குமார், அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கேனில் பெட்ரோல் வாங்கி தன் மீது ஊற்றிக் கொண்டார் அதனை தடுக்க வந்த காவலர் ரமேஷ் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் பிரவீன்குமாரை தடுத்து நிறுத்தினர். மேலும், ஓட்டுநர் பிரவீன் குமாரை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்,
0 Comments