திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராட காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். அடுத்து 3 நாட்களுக்கு கடலில் குளிக்க தடை விதிப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
0 Comments