Tamil Sanjikai

இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை தனது இல்லத்துக்கு அழைத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் புத்தாண்டு விருந்து அளித்தார்.

ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையுடன் உள்ளது. சிட்னியில் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 3-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் சிட்னி வந்த இந்திய அணியையும், ஆஸ்திரேலிய அணியையும் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் சிட்னியில் உள்ள தனது அதிகாரபூர்வ கிரிபிலி இல்லத்துக்கு இன்று அழைத்து புத்தாண்டு விருந்து அளித்தார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் பங்கேற்றனர். ரோஹித் சர்மா தனது குழந்தையைப் பார்க்க மும்பை சென்றதால் அவர் மட்டும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் அணிக்கான பாரம்பரிய நீலநிற உடை, டி- ஷர்ட் அணிந்திருந்தனர். கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் வெள்ளை சட்டையும், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அணிந்திருந்தனர். ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் அணியின் கோட்டை அணிந்திருந்தனர். இந்த படங்களை பிசிசிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

0 Comments

Write A Comment