Tamil Sanjikai

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனும், மாலையில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment