Tamil Sanjikai

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 64.

இவர் கடந்த வாரம் மாரடைப்பின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனிற்றி புதன் கிழமை காலை அவர் உயிர் பிரிந்தது.

ஆலயம் ஸ்ரீராம் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ’பம்பாய்’, ’திருடா திருடா’, விஜயகாந்த் நடித்த ’சத்ரியன்’, அஜித் நடிப்பில் உருவான ’ஆசை’, சரத்குமார் நடித்த ’தசரதன்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவரது மறைவுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment