Tamil Sanjikai

வங்கதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசன் 2 ஆண்டுகள் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

2018ஆம் ஆண்டு முத்தரப்பு தொடர், ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்திற்கு தரகர்கள் தன்னை அணுகியது குறித்து தகவலை அவர் தெரிவிக்கவில்லை என வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் மீது புகார் தெரிவித்த ஐசிசி, அவர்மீது 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தன் மீதான புகாரை ஏற்றதன் மூலம் ஷகிப் மீதான 2 ஆண்டு தடை என்பது ஓராண்டாக குறையும் என்றும், அவர், 2020 அக்டோபர் மாதத்திற்கு பிறகு போட்டிகளில் பங்கேற்கலாம் எனவும் ஐசிசி விளக்கமளித்துள்ளது.

வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டனான ஷகிப் அல் அசன், ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஷகிப் அல் அசன் அதிக ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment