Tamil Sanjikai

சென்னை அசோக் நகர் காவல்நிலையத்தில் வைத்து டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள காவல்நிலையம் முன்பும், காவல் வாகனங்கள் முன்பும் டிக் டாக் வீடியோ பதிவு செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் ஒரு நபர், அசோக் நகர் காவல் நிலையத்திற்குள் சென்று வருவதை வீடியோ பதிவு செய்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார்.

அந்த நபர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தவரா? அல்லது டிக் டாக் வீடியோ எடுப்பதற்காக அங்கு வந்தாரா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 Comments

Write A Comment