சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. இப்படத்தின் சில காட்சிகளுக்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சர்ச்சையாகி போன சர்காரில் சில காட்சிகளை படக்குழு நீக்கியது.
மேலும், படம் வெளியாகும் முன்பு சர்கார் கதை சர்ச்சையில் சிக்கியது. புகார் கூறிய வருண் ராஜேந்திரனின் பெயரையும் படத்தின் தொடக்கத்தில் குறிப்பிடுவதாக ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் அடுத்ததாக அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டிருந்த நிறுவனம் விலகிக் கொண்டது. இதனைக் கேள்விப்பட்ட ரஜினி, உடனடியாக லைகாவிடம் பேசியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, மீண்டும் ரஜினி படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநர் என்றவுடன் தயாரிப்பதாக லைகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய படங்களின் வெளியீட்டு பணிகள் முடிவடைந்தவுடன் அதிகாரப்பூர்வமாக புதிய படத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
0 Comments