Tamil Sanjikai

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது

அண்மைக் காலமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகமாக நிலவி வந்தது, இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் வகித்து வரும் தற்போதைய ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக கூறியுள்ளார்.

மேலும் கடந்த சில வருடங்களாக ரிசர்வ் வங்கியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்வதாகவும், ஆர்பிஐ ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் கடும் உழைப்பும் ஆதரவுமே சமீபத்திய வருடங்களில் ஆர்பிஐயின் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிவதற்கான காரணம் என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதவிக்காலத்தின் இடையிலேயே ராஜினாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment