ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து அதற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயலை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அந்த கட்சியின் இளம் தலைவரும், முக்கிய தலைவருமான சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments