Tamil Sanjikai

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டு தோறும் குளிர்காலத்தின் போது உறை பனியும், பனிப்பொழிவும் கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் உறைபனி காணப்படுகிறது. ஸ்ரீநகரில் கடுமையான பனிமூட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த டால் ஏரி வெறிச்சோடி காணப்படுவதால் படகு சவாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் அடர்ந்த பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, நாட்டின் மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் மொகல் சாலை முற்றிலுமாக பனியால் சூழப்பட்டுள்ளது. தொடர்ந்து விழும் பனிப்பொழிவால் சரித்திரப் புகழ்வாய்ந்த மொகல் சாலை மூடப்பட்டது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள பீர்பஞ்சால் மலைப்பகுதி வழியாகச் செல்லும் மொகல் சாலை அப்பகுதி மக்களுக்கு வியாபார ரீதியாகவும், போக்குவரத்திற்கும் பயன்பட்டு வந்தது. பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரம்பன் மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக டிரக் ஒன்று நிலைதடுமாறி சாலையில் இருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரக்கில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

0 Comments

Write A Comment