சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் எந்த புகைப்படத்தையும் பதிவிறக்கமோ, பதிவேற்றம் செய்ய முடியவில்லை என புகார்கள் எழுந்த நிலையில், பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நேற்று மாலை இந்தியா உள்பட உலகம் முழுவதும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவியேற்றமோ, பதிவிறக்கமோ செய்யமுடிவில்லை. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களையும் பார்க்க முடியவில்லை.
இணையதள சேவை பிரச்னையோ என முதலில் நினைக்கப்பட்டது .பின்னர், சமூக வலைத்தளங்களின் சர்வரில் ஏற்பட்ட பிரச்னையாக இருக்குமோ என தோன்றியது..
இதனால் பாதிக்கப்பட்ட பயனாளர்கள் தங்களது கோபம் மற்றும் ஆதங்கங்களை டுவிட்டரில் சுட்டிக்காட்டி #whatsappdown என்ற ஹேஸ்டேக் செய்தும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவையில்லாததால் நான் உள்பட எல்லோரும் ட்விட்டருக்கு சென்றோம் என்றும்,சமூக ஊடகம் ஒன்றுதான் உலகை ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் என்று டுவிட்டரில் கொட்டித் தீர்த்தனர்.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்களது செயலிகள் மூலம் படங்களை பதிவேற்றம் செய்தல், விடியோக்களை அனுப்புதல், பிற கோப்புகளை அனுப்புதல் ஆகிய சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதை கூடிய விரைவில் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்திருந்தார்
இந்நிலையில், பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, நேற்று எங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றதால், ஒரு சில பகுதிகளில் பயனாளர்களால் புகைப்படமோ, வீடியோ பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச்னை தற்போது சரிசெய்யப்பட்டது. விரைவில் அனைத்து பகுதிக்கும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது
0 Comments