சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, கேரள முதல்வர் பினராய் விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதைத் தொடர்ந்து அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
சோனியாகாந்திக்கு நாளை பிறந்தநாள் என்பதால் பகல் 11.30 மணிக்கு சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார். அப்போது சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து 10-ஆம் தேதி மதியம் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் பங்கேற்று அங்கு வரும் தலைவர்களுக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்குகிறார். பின்னர் அன்று இரவு முக ஸ்டாலின் சென்னை திரும்ப இருக்கிறார்.
0 Comments