தருமபுரி மாவட்டம் செட்ரப்பட்டி கிராமத்தில், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திரு ஸ்டாலின் அவர்கள் , விவசாயிகளின் தற்கொலை தொடர்வதாகவும், விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பிரதமர் அவர்களுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெற்று விடும் என்பதால், தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களின் பிரச்சினையை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.
0 Comments