சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க 5 லட்சத்து 80 ஆயிரத்து 188 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.
சனிக்கிழமை அன்று ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 754 பேரும், ஞாயிறன்று 4 லட்சத்து ஐந்தாயிரத்து 434 பேரும் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்துள்ளனர். இதனிடையே வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை கணக்கிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
21 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதற்கு தேவையான அணைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சத்யப்ரதா சாஹூ கூறியுள்ளார்.
0 Comments