தமிழகத்தில் அதிக மழை பொழிவை தருவது வடகிழக்கு பருவ மழை ஆகும். இந்த மழையானது அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும். இந்த வருடத்திற்கான மழை அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.இருந்தாலும் நாம் பாதுகாப்பாக இருக்க சில விஷயங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னவென்று இங்கே நாம் பார்க்கலாம்.
- மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.
- கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். வீட்டுக்கு சரியான எர்த் பைப் போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.
- சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை சிறுகுழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
- மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. மின்கம்பங்களில் எந்தவொரு கால்நடைகளையும் கட்ட வேண்டாம்.
- இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆகவே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆகவே நாம் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் மின்சாரத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கமுடியும்.
0 Comments