Tamil Sanjikai

ஏற்காடு ஒன்றிய பா.ஜ.க துணைத்தலைவர் சின்ராஸ் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய பாஜக துணைத்தலைவராக இருந்தவர் சின்ராஜ். இவர் நேற்று தனது சொந்த ஊரான கொழகூர் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment