Tamil Sanjikai

ஆகஸ்ட் 15, 2022க்குள், இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அரசாங்கம் ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது ஒரு புதிய கட்டிடம் அல்லது தற்போதுள்ள வரலாற்றுக் கட்டிடம் மறுவடிவமைப்பு செய்யப்படும்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக வட்டாரங்கள் தகவல்படி, வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை நிறுவனங்களை நாடாளுமன்றம் மற்றும் 3 கி.மீ. தூரத்தில் உள்ள சாஸ்திரி பவன் போன்ற தற்போதைய கட்டிடங்களை இடிப்பது உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் ஒரு புதிய பொதுவான செயலகம் அமைப்பது தொடர்பாக இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஒரு முன் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தின் நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நவீன வசதிகளை உள்ளடக்கியதாக சபையை புதுப்பிக்க பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் இதேபோன்ற வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

0 Comments

Write A Comment