Tamil Sanjikai

வரும், ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 12 ம் வகுப்பு படிக்கும் அனைவருக்கும் ஜனவரி 10 ம் தேதிக்குள் வழங்கப்படும் மடிக்கணினிகள் என்றும், பிளஸ் 2 வகுப்பு முடித்த 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிஏ என்று சொல்லக்கூடிய ஆடிட்டர் படிப்பிற்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment