பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்விக்கி நிறுவனம்,தற்போது உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது, அதனுடன் கூட மளிகை பொருட்களையும் நேரடியாக விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்விக்கி நிறுவனம்,தற்போது 60 நகரங்களில் உணவு விநியோக சேவை வழங்கி வருகிறது..அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்விக்கி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் நேரடியாக வீடுகளுக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோதனை முயற்சியாக தற்போது ஹரியானா மாநிலம் குர்கானில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் முக்கிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments