பிரித்தானியாவில் உள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்தாய் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, பல ஆண்டுகளாக வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஈக்வேடார் அதிபர் லெனின் மொரெனோ தெரிவித்துள்ளார்.
அசாஞ்சேவின் கைது குறித்து ஈக்வேடார் அதிபர் லெனின் மோரெனோ பேசிய போது, அவர் தூதரகத்தை வேவு பார்க்கும் மையமாக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டு தூதரகத்தில் இருந்து மற்ற நாடுகளை வேவு பார்ப்பதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய மோரெனோ, இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் சர்வதேச சட்டத்தின்படி அசாஞ்சேவை வெளியே அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
மேலும் அசாஞ்சே கைது செய்யப்பட்டதில் தங்கள் நாட்டில் 40 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக ஈக்வேடார் கூறுகிறது
அந்நாட்டின் தொழில்நுட்பங்களுக்கான துணை அமைச்சர் பாட்ரீகோ ரியல் கூறும்போது,
அசாஞ்சே கைது செய்யப்பட்டதில் இருந்து 40 மில்லியன் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். அமெரிக்கா, பிரேசில், ஹாலந்து, ஜெர்மனி, ருமேனியா, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் ஐக்கிய ராஜ்யம் ஆகியவற்றில் இருந்து முக்கியமாக இந்த தாக்குதல்கள் வந்துள்ளன என கூறினார்
0 Comments