Tamil Sanjikai

அரசுப் பள்ளி வகுப்பறையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட சம்பவத்தால் தேனி மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டி வாய்க்கால்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு, அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

தான் வசிக்கும் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளிக்கு அடிக்கடி அந்த ஆசிரியர் செல்வது வழக்கம். அப்போது அந்த ஆசிரியருக்கும், ஆசிரியைக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நெருங்கிப் பழகி இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதுமாக இருந்துள்ளனர். இதற்கிடையே, சில மாணவர்களே பயிலும் துவக்கப்பள்ளியில் காலியாக இருக்கும் வகுப்பறையில் பலமுறை இருவரும் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதைப் புகைப்படம் எடுத்துவைத்திருந்த ஆசிரியர், புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக உருவாக்கியுள்ளார். அந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்னர் தவறுதலாக ஆசிரியர்கள் குழுவில் பதிவிட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே உள்ள உறவு வெளி உலகிற்கு தெரியவந்தது. இதை அறிந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகம், ஆசிரியரை சஸ்பெண்டு செய்தது. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியையும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா தேவி, ``ஆசிரியர், தனியார் பள்ளியில் பணியாற்றியதால் உடனே சஸ்பெண்டு செய்யப்பட்டார். அனால் அந்த ஆசிரியை அரசுப் பள்ளி ஆசிரியை என்பதால், விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, உண்மைத் தன்மை அறிந்த பின்னரே சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். வெளியான வீடியோவில் இருக்கும் புகைப்படங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணை செய்ய இருக்கிறோம்!” என்றார்.

``நல் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடலாமா?'' என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

0 Comments

Write A Comment