Tamil Sanjikai

கொச்சி முசிறிஸ் பினாலே என்னும் சர்வதேச கலைச் சங்கமமானது கொச்சியில் 12-12-2018 (புதன்கிழமை) தொடங்கி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த கவின் கலைஞர்களின் படைப்புகள் இங்கு காட்சியப்படுத்தப்படுகின்றன.

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நிகழும் பினாலே நிகழ்வானது உலகின் பலநாடுகளிலும் நடக்கிறது. உலகளவில் பிரசித்தி பெற்றது வெனீஸ் பினாலே. ஆசியாவில் முன்னணி வகிப்பது கொச்சி பினாலே! போர்ட் கொச்சியின் 10 அரங்குகளில் இக்கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஓவியம், சிற்பம், புகைப்படம், ஒலி-ஒளி காட்சிகள், நவீன கலைச் செயலாக்கங்கள் என தற்கால கலை வடிவங்கள் அனைத்தும் இங்கு சங்கமிக்கும். உலகத் திரைப்படங்கள், நிகழ்த்து கலைகள், கலை-இலக்கிய அமர்வுகள் போன்றவை தினமும் மாலை வேளையில் நடைபெறும்.

ஸ்டூடன்ஸ் பினாலெ ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் உள்ள கவின்கலை மாணவர்களின் சிறந்த படைப்புகள் காட்சியப்படுத்தப்பட்டிருக்கும். பினாலெ நிகழ்வுகளுக்கான பொருட்செலவை கேரள அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செய்கின்றன. இக்கலை சங்கமத்தில் தனியார் கலை அமைப்புகளும் பிரத்தேக கலைக் கூடங்களை ஒழுங்கமைத்திருப்பார்கள்.

முழு அரங்குகளையும் நிதானித்து பார்வையிட இரண்டு நாட்கள் தேவைப்படும். நுழைவுக் கட்டணம் நூறு ரூபாய் மட்டுமே. கலை ஆர்வலர்களுக்கு இந்த சங்கமம் ஒரு மெகா விருந்து.

Programmes Schedule: http://www.kochimuzirisbiennale.org/kmb_2018_calendar/
Visit: http://www.kochimuzirisbiennale.org/visit-us/
December 12, 2018 - March 29, 2019
10 AM - 6 PM

0 Comments

Write A Comment