கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக அரசு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஊதியத்தை உயர்த்துதல், பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் போராட்டம் நடத்தும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதனால் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, சுகாதார திட்ட பணிகள் இயக்குனர் செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து மருத்துவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக அரசு மருத்துவர் மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
0 Comments