36 வயதினிலே', 'நாச்சியார்', 'மகளிர் மட்டும்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களை தொடர்ந்து ஜோதிகா கதாநாயகியாக நடித்து, அவரது கணவர் சூர்யா தயாரித்துள்ள படத்தை கல்யாண் டைரக்டு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து உள்ளது. என்றாலும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இந்த படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, யோகிபாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டைரக்டர் கல்யாண் ஏற்கனவே 'குலேபகாவலி' படத்தின் மூலம் அனைத்து தரப்பினரையும் சிரிக்க வைத்தவர். இந்த படமும் நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது தான்.
0 Comments