Tamil Sanjikai

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள்பரோலில் வந்து, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அவர் மேலும் ஒருமாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது 51 நாள் பரோல் காலம் முடிந்ததால் நளினி இன்று மாலை மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

0 Comments

Write A Comment