அல்- அஸிஸியா உருக்கு ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனை பெற்ற அவர், கடந்த டிசம்பர் 25-ம் தேதி லாகூரில் உள்ள கோட் லாக்பாத் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த சூழலில்,
கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி உடல் நலக் குறைபாட்டைக் காரணம் காட்டி நவாஸ் ஷெரீப் ஆறு வார காலம் ஜாமீன் கேட்டிருந்தார்.
அதன்படி விடுவிக்கப்பட்டவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது ஜாமீனை மேலும் நீட்டிக்க கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவினை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து , பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் சிறைக்குத் திரும்பினார். முன்னதாக, நவாஸ் ஷெரீப் இல்லத்தில் இருந்து அவர் சிறை செல்லும் வரை வழிநெடுக அவரது ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். 4 மணி நேரமாக ஆதரவாளர்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற நவாஸ் ஷெரீப் கார், கோட் லக்பத் சிறைச்சாலையை நள்ளிரவு சென்றடைந்தது. சிறைக்கு சென்றதும், ஆதரவாளர்களுக்கு நவாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.
0 Comments