இந்தியா முழுவதும் திருத்தும் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது டெல்லியில் நேற்று ராகேஷ் என்ற வாகன ஒட்டி குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ரூ.25 ஆயிரம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் மிகவும் ஆத்திரம் அடைந்த ராகேஷ் தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் வைத்து தீயிட்டு கொளுத்தினார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments