Tamil Sanjikai

கல்கி ஆசிரமத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. சென்னை, பெங்களூரூ, சித்தூர் நகரங்களில் 40 இடங்களில் 5 நாட்கள் சோதனை நடைபெற்றது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற சோதனையில் சுமார் 800 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.44 கோடி ரொக்கம், 90 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பு வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்கி ஆசிரமம் பினாமி பெயர்களிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் மட்டும் கல்கி ஆசிரமம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டீஷ் விர்ஜின் தீவுகளிலும் கல்கி ஆசிரமம் கணக்கில் காட்டாத முதலீடுகளை செய்துள்ளது. மேலும், சோதனையின்போது 4 ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment