பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய மத்திய அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக பொறுப்பு வகித்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், அவரது புதிய அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றது. இதில், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சதானந்த கவுடா, ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், கடந்த முறை ராணுவ அமைச்சராக இருந்த, தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், மீண்டும் அமைச்சரானார். புதியவராக பா.ஜ., தலைவர் அமித் ஷா அமைச்சராக பொறுப்பேற்றார்.
0 Comments