தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் கடந்த அக்டோபர் 20ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் ஆளும் MAS-IPSP கட்சியைச் சேர்ந்த அதிபர் ஈவோ மொராலெஸ் 47.08% வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தல் முடிவுகளில் முறைகேடு ஏற்பட்டதாக எதிர்கட்சியின் அதிபர் வேட்பாளரான கார்லோஸ் மேசா-வின் ஆதரவாளர்களுக்கும், அதிபர் ஈவோ மொராலெஸ்-ன் ஆதரவாளர்களுக்குமிடையே போராட்டம் வெடித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வந்த இப்போராட்டத்தில் கார்லோஸ் மேசா-வின்ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து ஆக்ரோஷம் அடைந்த போராட்டக்காரர்கள் மத்திய பொலியாவின் கொச்சபம்ப நகரின் விண்டோ பகுதியில் சூழ்ந்து கொண்டு அந்நகரத்தின் பெண் மேயர் பாட்ரிசியா அர்சி-யை கொலைகாரி என்ற கோஷங்களுடன் சூழ்ந்து கொண்டனர்.
பின்னர் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் அவரை வெறும் காலுடன் இழுத்துச் சென்று, தரையில் அமரவைத்து அவரின் தலைமுடியை வெட்டினர். பின்னர் சிவப்பு மையை அவரின் மீது ஊற்றினர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்க்காரர்களிடம் சிக்கியிருந்த பெண் மேயரை மீட்டுச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பின்னர் பொலியாவில் வெடித்துள்ள போராட்டம் உலக அரங்கை அதிரச்செய்துள்ளது.
0 Comments