Tamil Sanjikai

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு பயிலும் மாணவி மகாலட்சுமி என்பவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி!

ஆலங்காயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், சிறப்பு வகுப்புக்காக வந்துள்ளனர்.தில் மகாலட்சுமி என்ற மாணவி, பள்ளியின் மேல்தளத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தற்கொலையா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட ஆலங்காயம் கிராமமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி மகாலட்சுமியின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

0 Comments

Write A Comment