Tamil Sanjikai

கஜா புயலை அடுத்து ஒரு வாரத்துக்கும் மேல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்தது, அனால் கடந்த சில நாட்களாக மழை எதுவும் பெய்யாமல் ‘நேற்று வரை மிகவும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அது இன்று சற்று மாறும். நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

அதே நேரத்தில் நாளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய நிறைய வாய்ப்புள்ளது. அதேபோல தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த மழை அடுத்த 2 அல்லது 3 நாட்கள் வரை தொடரக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment