காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக கடுமையான சொற்களை பயன்படுத்தும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள், இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என கூறி வருகின்றனர். இதனால், இரு நாட்டு உறவில் வழக்கத்திற்கு அதிகமான பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..
இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவம், நள்ளிரவில் ஏவுகணை வீசி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. காஸ்நவி என்ற இந்த ஏவுகணை 290 கி.மீட்டர் வரை சென்று போர் ஆயுதங்களை வீசும் திறன் பெற்றது என்று பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.
ராணுவத்தின் இந்த சோதனைக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி மற்றும் பிரதமர் இம்ரான்கான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோக்களை அந்நாட்டு தகவல் தொடர்பு அதிகாரி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
0 Comments