தமிழகத்தில் வரும் 27,28 ம் தேதிகளில் புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை மறு நாள் 26 ம்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அது, வரும் 27,28 ம் தேதிகளில் புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் 26 முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தமிழகத்தை நோக்கி வரும் இந்த புயலுக்கு ஃபானி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், புயலானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
0 Comments