இந்தியாவின் எல்லை பகுதியான காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள், தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து, அம்மாநில சோபோர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் நேற்று 20 பேர் படுகாயம் அடைந்ததுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில், கடந்த சில மாதங்களாக, பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதும், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் மறுதாக்குதலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று காஷ்மீரின் சோபோர் நகரில் உள்ள பொது பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளபட்ட பயங்கரவாத தாக்குதலில், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் காஷ்மீர் போலீசார், படுகாயம் அடைந்த 20 பேரில் 6 பேர் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், இந்த தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் யார் என்பது குறித்த விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனிடையில், கடந்த 10 நாட்களில், காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நான்காவது தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments