இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றபோது அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், கிங்க்ஸ் பெரி ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பில் இந்தியர்கள் உட்பட 290 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமானோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை சென்றிருந்த நடிகை ராதிகா சரத்குமார் சின்னமன் கிராண்ட் ஓட்டலில்தான் தங்கி இருந்துள்ளார். குண்டு வெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் அங்கிருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் சின்னமன் ஓட்டலில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்துள்ளது. இது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments