திருச்சி மாவட்டம் கீரமங்கலம் அருகே ஒரே பெயர் கொண்ட இருவருக்கு, ஒரே பான் கார்டு எண் வழங்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கீரமங்கலத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், சமயபுரத்தில் உள்ள கனரா வங்கியில் தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
வங்கி அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்த போது செந்தில் குமாரின் பான் கார்டு எண்ணும், ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் கீழவாளாடியை சேர்ந்த செந்தில் குமாரின் பான் காட்டு எண்ணும் ஒன்றாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் குழப்பம் ஏற்பட்டது. இருவருடைய பிறந்த தேதியும், தந்தை பெயரும் ஒன்று என்பதால் குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பின்னர் வருமான வரித்துறை அலுலத்தில் பான் கார்டு குளறுபடி குறித்து புகார் அளிக்கும் படி இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
0 Comments