Tamil Sanjikai

திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் 23ம் தேதி கேரள மகளிர் ஆணையத்தின் சார்பில் அதாலத் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 73 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் தனது 87 வயது கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

அதன்படி தான் அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனவும், தனது கணவர் இறந்துவிட்டதாகவும், 10 வருடங்களுக்கு முன் வயநாட்டில் 71 வயதாக ஒருவருடன் தனக்கு இரண்டாவதாக திருமணம் ஆனதாகவும், தன்னை திருமணம் செய்தவர் தன்னிடம், அவருக்கும் திருமணமாகி தற்போது மனைவி இறந்துவிட்டார் எனவும், மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவர் தனது ஓய்வு பணம் ரூ 15 லட்சத்தை திருடி விட்டு சென்றதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் தனது புகாரில் "இது தொடர்பாக போலீசில் தான் புகார் அளித்தாகவும், அதன் விசாரணையில் அவர் தன்னை போலவே பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றவிட்டதாகவும், குறிப்பாக அரசு பணி செய்து கணவரை இழுந்து ஓய்வு பெற்ற பெண்களாக பார்த்து அவர்களை திருமணம் செய்து அவர்களிடம் ஓய்வு பணத்தை திருடவே இவர் இதை செய்துள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

71 வயது மனைவியின் ரூ15 லட்சம் பணத்தை 87 வயது கணவர் திருடி சென்றதாக அளித்த புகார் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment