ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக கிடைத்த செய்தியை தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேலையில் ஈடுபட்டுள்ளனர் இந்திய ராணுவத்தினர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்றதை தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக கிடைக்கப்பட்டிருந்த தகவலை தொடர்ந்து, தற்போது ஜம்மு காஷ்மீரின் பந்திப்பூர் பகுதியில் இந்திய ராணுவத்தினர், சிறப்பு செயல்பாட்டுக் குழு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மூவரும் இணைந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி நடுநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
0 Comments