Tamil Sanjikai

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூரிலுள்ள சேகர் சூப்பர் ஸ்டோர் என்ற கடைக்கு வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

கடையின் உரிமையாளர் வீட்டிலும் இரவு வரை சோதனை நீடித்த நிலையில், இன்றும் ஆய்வு தொடரும் என்று கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment